பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

குறைதீர் கூட்டம் 

அரியலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் உள்ளிட்ட 4 வட்டத்தில் உள்ள கிராமங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு நடைப்பெற்றது.

இதில் அரியலூர் தாலுகாவில் 35 மனுக்களும், ஆண்டிமடம் தாலுகாவில் 41 மனுக்களும், செந்துறை தாலுகாவில் 27 மனுக்களும், உடையார்பாளையம் தாலுகாவில் 17 மனுக்கள் என 120 மனுக்கள் பெறப்பட்டதில் அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story