பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

X
கடலூர் மாவட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் தாலுகா மாவட்டத்தில் 10 அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் மற்றும் தனி தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது. இதில் முகாமில் குடும்ப அட்டை தாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
