நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொது விநியோக திட்ட பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், செஞ்சேரி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டப்பாடி கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் தலைமையிலும், குன்னம் வட்டம், கிழுமத்தூர் தெற்க்கு கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில், கலால் உதவி ஆணையர் மனோகரன் தலைமையிலும் பிப்ரவரி-10 ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம், தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story