பொது விநியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம்
பொது விநியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம்
புகழூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம் வட்டாட்சியர் முருகன் தலைமையில் நடைபெற்றது. பொது விநியோகத்திட்டத்தில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க, குறைகள் நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொது மக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை வட்டாட்சியரிடம் அளித்தனர்.
பெறப்பட்ட மக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வட்ட வழங்கல் அலுவலர் மல்லீஸ்வரனிடம் வட்டாட்சியர் முருகன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வும் காணப்பட்டது.