வெளிநாட்டு இன நாய்களால் பொதுமக்கள் அச்சம்

வெளிநாட்டு இன நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு இன நாய்களால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு இன நாய்களால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டி கிராமத்திற்கு கருப்பு கலரில் இரண்டு வெளிநாட்டு நாய்கள் வந்ததை கண்டு இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து கிராமமே ஒருவித பீதியுடன் பரபரப்புடன் பேசிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்கா ஒன்றில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 வெளி நாட்டு ரக நாய்கள் கடித்ததில் சிறுமி பலத்த காயமடைந்தார்.

இந்த வெளிநாட்டு இன ராட் வைலர் வகை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்களை வைத்திருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய, மூர்க்கத்தனமான வகையைச் சார்ந்த இந்த அந்த 2 நாய்களையும் உடனடியாக அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் அதன் உரிமையாளர் புகழேந்திக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் பொதுமக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டு இன ராட் வைலர் வகை நாய்கள் மற்றும் மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய, மூர்க்கத்தனமான வகையைச் சார்ந்த மயோமி என்ற பெண் நாயும், குக்கி என்று பெயரிடப்பட்ட ஆண் நாயும் என 4 நாய்கள் தற்பொழுது சிங்கம்புணரி அருகே வையாபுரிபட்டி கிராமத்திற்கு அதன் உரிமையாளரான புகழேந்தி என்பவரின் தோட்டத்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த ஊரான எஸ்.வையாபுரி பட்டி கிராமப்புற பண்ணை வீட்டிலும், தோட்டங்கள், தோப்பு, வயல்வெளிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதன் விளைவாகவே பாதுகாப்பு கருதியே இந்த வகையின் நாய்களை தாங்கள் வளர்த்து வருவதாக ராட்வைலர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி தெரிவிக்கிறார். சென்னையில் நடந்த எதிர்பாராத அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து தனது வளர்ப்பு பிராணிகளான ராட் வைலர் நாய்களை தனது தோட்டத்து வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறுகிறார்.

இருந்த போதிலும் மிகவும் மூர்க்கத்தனம் நிறைந்த ராட்வைலர் இன நாய்களை மாவட்ட சுகாதார துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு துறையினர், எஸ் வையாபுரி பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நாய்களின் நடவடிக்கைகளை நாள்தோறும் தொடர் கண்காணிப்பின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை கொடூரமான முறையில் கடித்து குதறிய பரபரப்பு மிகுந்த சம்பவத்திற்கு காரணமான ராட்வைலர் இன நாய்கள் தங்கள் பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருப்பது சுற்றுப்புற பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story