தேர்தல் தொடர்பான புகாரை சி-விஜில் ஆப் மூலம் தெரிவிக்கலாம்

தேர்தல் தொடர்பான புகாரை சி-விஜில் ஆப் மூலம் தெரிவிக்கலாம்
ஆலோசனை கூட்டம்
வங்கி அதிகாரிகள், உணவகம், தங்கும் விடுதி, கல்யாண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தால், மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து அனைத்து வங்கி அதிகாரிகள், உணவகம், தங்கும் விடுதி, கல்யாண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுடன், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

அதிக தொகையிலான பணப்பட்டுவாடா ஆகும்பட்டத்தில் வங்கி அதிகாரிகளும், அதேபோல், உணவகம் அல்லது விடுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநபர்கள் தங்குவதற்கு அனுமதிக்க கூடாது எனவும், கல்யாண மண்டபத்தில் அனுமதியில்லா கட்சி கூட்டமோ அதையொட்டி எந்த நிகழ்வுகளும் அனுமதிக்க கூடாது எனவும் அதனை மீறும்பட்சத்தில் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும், c-Vigil App மூலமாகவும் புகாரினை தெரிவிக்க வேண்டும்.

நகை அடகு கடை உரிமையாளர்கள் தினசரி நகை அடகு விவரங்களை வட்ட அலுவலகங்களுக்கு வழங்கிட வேண்டும். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில், அது தொடர்பான புகாரினை அனைத்து தரப்பினரும், மாவட்ட ஆட்சியரகத்தில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா எண்.1800 425 9464 மற்றும் 1950 எண்கள் மூலமாகவும், தொடர்பு கொண்டு புகார் விவரங்களை வழங்கலாம்" என்றார். இக்கூட்டத்தில் அனைத்து வங்கி அதிகாரிகள், உணவகம், தங்கும் விடுதி, கல்யாண மண்டப உரிமையாளர்கள், நகை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story