நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

மனு அளித்த மக்கள்

நாகை அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் டி டிஆர்ஓ பேபி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பழங்குடி இன மக்களுக்கு அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தனர்.

வேதாரண்யம் அருகே வாய்மேடு கிழக்கு ஒந்ததே வன்காடு பகுதியை சேர்ந்த பழங்குடி இன மக்கள் கொடுத்த மனுவில் தெரி வித்திருப்பதாவது, கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் அருண்தம்புராஜ் பழங்குடி இன மக்களாகிய எங்களின் 16 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

தற்போது பட்டா வழங் கப்பட்ட இடம் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு தாழ்வான பகுதியில் உள் ளது. அதில் கட்டப்பட்ட குடிசை வீடுகள் தற்போது பெய்த மழைதண்ணீரில் அடித்து சென்றுவிட்டது. எங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கியும் அடிப் படை வசதிகள் இன்றி பயன் இல்லாத நிலையே உள்ளது.

நாங்கள் தற்போது பச்சிளம் குழந்தைகள், வயதானவர்களுடன் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தங்கி உள்ளோம். பழங்குடி இன மக்களாகிய எங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மணல் நிரப்பி சமன் செய்து வீடு, குடிநீர், மின்சாரவசதி, குடிலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story