விழுப்புரம் : மக்கள் குறைத்தீர் நாள் கூட்டம்
மக்கள் குறைத்தீர் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 471 மனுக்கள் பெறப்பட்டது.
அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.62,400/- மதிப்பீட்டில் காதொலிக்கருவி மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தலா ரூ.6,690/- வீதம் 01 விலையில்லா தையல் இயந்திரங்களும், தலா ரூ.7280/- வீதம் ரூ.131040/- மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டியும், பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களி வாரிசுதாரர்களுக்கு மற்றும் படுகாயமடைந்த 03 நபர்களுக்கு ரூ.6,50,000/- மதிப்பீட்டில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியுதவிக்கான காசோலையினை என மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.8,50,130/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரஸ்ேவரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.