காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

காவல்துறை குறைத்தீர் முகாம் 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைப்பெற்றது.

பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ்ராவத் உத்தரவின் பேரில் பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் அசோக் மேற்பார்வையில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பாபநாசம் அய்யம்பேட்டை கபிஸ்தலம் அம்மாபேட்டை மெலட்டூர் ஆகிய போலீஸ் சரகங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சப்இன்ஸ்பெக்டர்கள் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தனிப்பிரிவு போலீசார்கள் கலந்து கொண்டனர்.

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 100க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. குடும்ப பிரச்சனை இட பிரச்சனை காசோலை பிரச்சனை உள்ளிட்ட வழக்குகளுக்கு இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிவில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags

Next Story