இரண்டு கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் குழப்பத்தில் பொதுமக்கள்.....

இரண்டு கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் குழப்பத்தில் பொதுமக்கள்.....

 வாக்கு சேகரிப்பு

ஒரே நேரத்தில் ஒரே பகுதிகளில் இரண்டு கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் ஒரே நேரத்தில் ஒரே பகுதிகளில் இரண்டு கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் குழப்பத்தில் பொதுமக்கள்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேலையில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் மற்றும் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் என இருவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் சின்ன காமன் பட்டி , வெங்கடாசலபுரம், முக்குராந்தல், என பல பகுதியில் வரிசையாக இரண்டு கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே குழப்பமும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு முடித்து திரும்பும் முன்னரே அதே பகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தனது பிரச்சாரத்தை தொடங்கியதால் அங்கு இருந்த பொதுமக்கள் பெரும் குழப்பத்தை சந்திக்க நேர்ந்தது.

மேலும் சாலையின் ஒரு ஓரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் மற்றொரு ஓரத்தில் அதிமுக கட்சி கூட்டணி கட்சிகளின் கொடிகளும் நிலை கொண்டிருந்தன.

இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பாடல்களை மாறி மாறி ஒலித்தது பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது. இரு கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவு நிர்வாகிகள் வாகனங்கள் அதிக அளவில் சூழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags

Next Story