சங்கரன்கோவில் அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் !
திமுக
சங்கரன்கோவில் அருகே திமுக சார்பாக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வீரசிகாமணி பெரியார் திடலில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் லாலா சங்கரபாண்டியன் மற்றும் திமுக மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story