சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் சுபாசு, பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் பொய்யாமொழி, மாநில மாணவர் அணி துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முடிவில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் கோகுல் காளிதாஸ் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story