புதுப்பாளையத்தில் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் பொதுக் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி முருகன் கோவில் வளாகத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கான ஒன்றிய சங்கம் சார்பில்,
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் ஒன்றிய தலைவர் சசிகலா மாரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் அருள்மணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி மற்றும் மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி மாவட்ட செயலாளர் சேகர் மாவட்ட பொருளாளர் குப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று,
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி பேசுகையில் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை உத்தரவு வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றி கூறினார் பின்னர் நிலுவையில் உள்ள மாத ஊதியம் நிலுவைத் தொகை வழங்க புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கையை வைக்கப்படும் என்றும் குடிநீர் இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் மாத ஊதியம் அரசு கருவூல கணக்கில் இருந்து வழங்க வேண்டும் என்றும் தூய்மை காவலர்களுக்கு தாட்கோ மூலம் அளிக்கப்படும் சலுகைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
தூய்மை காவலர்களுக்கு பணிப்பதிவேடு துவக்கவும் குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் கல்வி பயிலும் குழந்தைகள் உதவித்தொகை ரூபாய் 3000 பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கூறி தீர்மானம் நிறைவேற்றினார்கள் இந்நிகழ்வில் புதுப்பாளையம் ஒன்றிய சங்க நிர்வாகிகள் முருகன் , சீனிவாசன் , சிவக்குமார் , தமிழ்ச்செல்வன் , மோகன் , ரங்கநாதன் , வள்ளி ,
கஸ்தூரி , ரோஜா , சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினருக்கும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர் காஞ்சி முருகன் கோவில் வளாகத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஒன்றிய சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றது
