திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொது கூட்டம்
தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் திடலில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்தநாள் மற்றும் திமுக நிதிநிலை அறிக்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி வள்ளலார் திடலில் திமுக கட்சியின் சார்பில் திராவிட மாடல் நாயகனின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தர்மபுரி நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது தலைமை வைத்தார் தர்மபுரி நகர துணை செயலாளர் முல்லைவேந்தன் வரவேற்புரை வழங்கினார். முன்னிலையாக அன்பழகன் கனகராஜ் சந்திரமோகன் செல்வராஜ் ராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன் மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கட்சி கொடி ஏற்றினார். பொதுக் கூட்டத்தில் சட்டமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் வாசுதேவன் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக அரசின் சாதனைகளை பற்றி விரிவாக பேசினார்கள் பெண்களுக்கு இலவச பேருந்து கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்று மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் பேசினார். இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story