திமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

திமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
X

எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டம் 

மேட்டூரில் திமுக சார்பில் நடந்த நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேட்டூர் சதுரங்காடியில் எல்லோருக்கும் எல்லாம் மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம். செல்வகணபதி தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு துறை துணைத் தலைவர் அரசகுமார் சிறப்புரை ஆற்றினார். இதில் சேலம் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சம்பத்குமார், நகர செயலாளர் காசி விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் மிதுன் சக்கரவர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ,சீனிவாச பெருமாள் மற்றும் மாவட்டம், நகரம், ஒன்றியம் ,பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story