தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கை வயல் பொதுமக்கள் அறிவிப்பு!

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கை வயல் பொதுமக்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பாக அங்கு வசிக்கும் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியாவையே அதிர்ச்சலைகளை ஏற்படுத்தியது. அதன் பின் இது சம்பந்தமாக வெள்ளனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் மாற்ற வேண்டும் என தெரிவித்தனர் போராட்டமும் செய்தனர்.

இதனை ஏற்ற தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் இந்த வழக்கை மாற்றியது அதன் பின் இதுகுறித்து கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 250 பேரிடம் விசாரணை செய்து மேலும் 25 பேருக்கு மேல் டிஎன்ஐ சோதனையும் செய்யப்பட்டுள்ளது ஐந்து பேருக்கு குரல் மாதிரி சோதனையும் செய்யப்பட்டது இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி வன்கொடுமை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிலையில் இம்மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கின்றோம்.

15 மாதம் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை எங்களுக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது ஆகவே நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி புறக்கணிப்பு பதாகைகளை வைத்துள்ளனர் இதனால் தற்பொழுது ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story