கொண்டத்துகாளியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

பெருமாநல்லூர் கொண்டத்துக்காளி அம்மன் கோவில் வழியாக செல்கின்ற சாலையை அடைத்து கேட் போட முயற்சிக்கும் கோவில் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் - பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் வழியாக செல்கின்ற நெடுஞ்சாலை துறை சாலையை அடைத்து கேட் போட முயற்சிக்கும் கோவில் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை தீர்க்கும் நிகழச்சியானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்‌. இந்தக் கோயில் வளாகத்திலன் இடையே நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான வழித்தடம் நம்பியூர் வரை செல்கின்றது.

இந்தப் பாதையில் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து கிடையாது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கோவிலின் காம்பவுண்ட் சுவர் அருகிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மகளிர் தாய் சேய் நல விடுதி அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் சென்று வர வசதியாகவும் உள்ளது. இந்த நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் காம்பவுண்ட் சுவர் எழுப்பி பாதையை மறைத்து கேட் அமைக்க நேற்று (வெள்ளி) அன்று அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

இதற்கு பெருமாநல்லூர் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுமார் ஐந்து ஆண்டு காலத்துக்கு மேலாக இந்த கேட் அமைக்கும் பணிக்காக கோயில் நிர்வாகத்தினர் முயற்சி செய்வதும் பொதுமக்கள் எதிர்ப்பால் தள்ளிப் போவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. சுமார் பத்து ஊராட்சி பொதுமக்கள் இது பயன்படுத்தும் பொது வழியாக இருக்கின்றது. இதனை அடைப்பது பொதுமக்கள் நலனுக்கு எதிரான செயலென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், மருத்துவமனைக்கு விரைந்து செல்லவும், அந்தப் பகுதி குடியிருப்பு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு வந்து செல்லவும் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

பல ஊர்களில் இருந்து வரும் பொதுமக்கள் இரவு நேரத்தில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியூர் கிளம்பி செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆகவே கேட்டு அமைக்கும் எண்ணத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.மேலும் இந்த பிரச்சனை சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை நெடுஞ்சாலைத்துறை மாவட்ட ஆட்சியர் போன்ற அனைவருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்படும் எனவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story