நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிட்டம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

கோவை: குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிட்டம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நான்கு கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருமத்தம்பட்டி நகராட்சியுடன் கிட்டம்பாளையம் ஊராட்சியை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டது. இதற்கு கூட்டத்திற்கு வந்த அனைத்து பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து கிட்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களை கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கூடாது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல்வேறு பகுதிகளில் நகராட்சி வேண்டாம்,ஊராட்சியே போதும் என போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story