ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி காவேரி நகரில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு குடியிருப்பு பகுதியில் ஊராட்சி சார்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் ரிக் வண்டி வந்த போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் மற்றும் துணைத்தலைவர் கேசவன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்புகள் நடுவே ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஏற்கனவே, வீடுகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தால் கடுமையாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை ஊராட்சி நிர்வாகம் தற்காலிகமாக கைவிடுவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story