கால்வாய் பகுதியில் மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கால்வாய் பகுதியில் மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு 

கால்வாய் பகுதியில் மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் செண்டத்தூர் ஊராட்சியில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. தாழ்வழுத்த மின்சாரம் காரணமாக சீரான குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விவசாய நிலங்களுக்கு கடந்த ஒரு மாதமாக கால்வாய் ஓரத்தில் 7 மின் கம்பங்கள் அமைக்கும்பணி நடைபெற்றது. அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் மின் பாதை அமைத்து உயர் மின் அழுத்த கம்பிகள் சென்றால் தங்கள் பகுதியில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள கால்வாய் ஓர பகுதியை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் கால்வாயை தூர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் அளவீடு செய்து மின் கம்பம் நடப்பட்டது.

தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது. பேரணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் சங்கர், வருவாய் ஆய்வாளர் சற்குணம், கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரி, ஊராட்சி மன்ற தலைவர் தேவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story