தென்காசியில் சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு
தென்காசியில் சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி 23ஆவது வார்டு பகுதியில் 15 நாட்கள் ஒருமுறை குடிநீர் வழங்குவது குறித்து முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி அந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை தென்காசி நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அங்கிருந்த பொறியாளர் ஜெயப்பிரதா, பொதுமக்களை அழைத்து விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என நம்பிக்கைத் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story