தார் சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மனு!

தார் சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மனு!

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

திருப்பூர் அருகே தார் சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட வலசு கிராமத்தில் 1500க்கு மேற்பட்ட பொது மக்கள் பல வருடங்களாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் தார் சாலை வசதி இல்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும்.,இதுவரை பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலரிடம் மனு அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்துக்கப்படவில்லை எனவும், மாவட்ட நிர்வாகம் இனியும் காலம் கடத்தாமல் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story