கோவில் நிலத்தை மீட்க கோரி வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
மனு அளித்த கிராம மக்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மேட்டாங்காடு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனியாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு செல்லும் பாதையானது எடப்பாடி, கல்வடங்கம் பிதான சாலையிலிருந்து பழனியண்டவர் கோவில் வரை சுமார் 20 அடி அகலமும், 100 அடி நீளமும் இருந்து வந்ததாகவும் தற்போது இந்த பாதையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களும், பொதுமக்களும் கோவிலுக்கு சென்று வர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இதேபோல் திருவிழா காலங்களிலும் ஆக்கிரமிப்பால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாமல் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் எனவே இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையூறுயின்றி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் வந்து வட்டாட்சியர் அறிவுடைநம்பியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.