நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக விழுப்புரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக விழுப்புரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் பழனியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் ராம்பாக்கம் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் குடி யிருந்து வருகிறோம்.

எங்கள் குடியிருப்பானது கடந்த 1964-ல் அப் போதைய அரசால் வழங்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரையிலும் அரசு எங்களுக்கு மனைப்பட்டா வழங்கா மல் உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு வழங்கி வருகிறபோதிலும் தற் போது மனைப்பட்டா அரசு தரப்பில் தயார் நிலையில் இருந்தும் எங்களுக்கு ஏன் வழங்கப்படாமல் உள்ளது என தெரியவில்லை. எனவே எங்களுக்கு மனைப்பட்டாவை உடனடியாக வழங்க வேண் டும். அவ்வாறு வழங்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தொடர் போராட்டம் நடத்துவோம் என அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags

Next Story