ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

குடிநீர் பிரச்சனையை போக்கிய ஊராட்சி மன்ற தலைவர்

பிள்ளையார்குளம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை போக்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரசு வழங்கும் நிதியியல் முறைகேடு செய்து தன்னுடைய மற்றும் தன் உறவினர்களை செல்வச்சீமான்களாக வலம் வர வைக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மத்தியில் தனது எளிமையான செயல்களால் கிராம மக்களிடம் பாராட்டு பெற்று வருகிறார் பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற தலைவரான இளசு என்ற வீரபாண்டி.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது பிள்ளையார்குளம் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் வீரபாண்டி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற அரசு நிதியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்த நிதியை பயன்படுத்தி பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுவருகிறார்.

அங்குள்ள மேல்நிலை தொட்டியின் தூண்கள் வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் குடிநீர் ஏற்ற முடியாத நிலை இருந்ததால் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தரைத்தள குடிநீர் தொட்டியை தனது சொந்த செலவில் மராமத்து செய்து புதிய குடிநீர் குழாய் அமைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிக வருவாய் இல்லாத பிள்ளையார்குளம் ஊராட்சி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலைவசதி, மின்சாரம், பொது சுகாதாரம் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் அரசு நிதியை எதிர்பார்த்து காத்திருக்காமல் எனது சொந்த நிதியை செலவு செய்வேன். அரசு நிதி வந்தாலும் வராவிட்டாலும் இந்த மக்களுக்காக தொடர்ந்து பணி செய்வேன் என்றார். அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி கூறும்போது, எங்க ஊராட்சி மன்ற தலைவர் உள்ளூரிலேயே சுற்றிச்சுற்றி வந்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.

மக்களின் குறைகளை தீர்க்கும் நடவடிக்கைக்கு அரசு நிதிக்காக காத்திருக்காமல், அவரது சொந்த பணத்தை செலவு செய்வார். ஆகவே எங்க ஊராட்சி மன்ற தலைவரின் நிதிச்சுமையை போக்க பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்றார்.

Tags

Next Story