திருமயம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

திருமயம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

சுத்தம் செய்யப்பட்ட கால்வாய்

திருமயம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தப்பேட்டை பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் போர்க்கால அடிப்படையில்,

அந்த சாக்கடைகளை சுத்தப்படுத்தி தற்போது பொதுமக்களுக்கு பாதிக்காத வண்ணம் சாக்கடை நீர் நல்ல முறையில் செல்கிறது இதனை அடுத்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொறுப்பேற்றதிலிருந்து திருமயத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், சாலை வசதி, இதுபோன்று சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நல்ல முறையில் செய்து வருகிறார்.

என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Tags

Next Story