பொதுமக்கள் போராட்டம் - முன்னாள் அமைச்சர் நிவாரணம்
முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பழையகாயல் அருகே உள்ள ராமச்சந்திரா புரம் பகுதி பெருமளவில் பாதிக்கபட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள் பெருமளவில் இடிந்து தரைமட்டமாகி அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என யாரும் அப்பகுதி மக்களை கண்டுகொள்ளாத நிலையில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் சென்று கேட்டபோது தற்போது வரை எங்கள் பகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை பொதுமக்கள் தெரிவித்தனர் மேலும், உணவு, குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் குழந்தைகளுடன் மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்த அவர்கள் தங்களுடன் தூத்துக்குடிக்கு காரில் அழைத்து சென்று முதற்கட்டமாக அவர்களுக்கு தேவையான குடி தண்ணீர்,பிஸ்கட், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அப்பகுதி மக்களுக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.