ராமநாதபுரத்தில் பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தால் கழிவுநீர் வெளியேறி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஊழியர்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் பகுதியில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு முறையான திட்டமிடல் இல்லாததால் பாதாள சாக்கடை கழிவு நீர் உடைந்து சாலையில் தேக்கம் இதனால் பொதுமக்கள் கடும் அவதி மீண்டும் கழிவு நீர் குழாய் புதைக்க வந்த பராமரிப்பு ஊழியர்களை பெண்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து குழாய்கள் பதிக்க வந்த வாகனங்கள் மற்றும் ஊழியர்களை பெண்கள் சிறை பிடித்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ராமநாதபுரம் ரமலான் நகர் மாட கோட்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் கார்மேகம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

Tags

Next Story