தக்கலையில் கனிம வளம் கடத்தலை தடுக்க கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தக்கலையில் கனிம வளம் கடத்தலை தடுக்க கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தக்கலையில் கனிம வளம் கடத்தலை தடுக்க கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட தக்கலையில் கனிம வளம் கடத்தலை தடுக்க கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர்பலி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக போராட்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் பென்சிங் தலைமை வகித்தார். வக்கீல்கள் டென்னிசன், பள்ளியாடி பிஜு மதிமுக ஒன்றிய செயலாளர் ஜே பி சிங் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story