சாலையில் தடுப்பு அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் !

சாலையில் தடுப்பு அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் !

போராட்டம்

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்ததையடுத்து, நான்குவழிச் சாலையின் மையப் பகுதியில் தடுப்பு அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த காசிபாளையத்தைச் சோந்தவா் அய்யாமுத்து (68). தனியாா் நூற்பாலையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், பணி முடிந்து மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். தனியாா் உணவகம் அருகே திண்டுக்கல்- கரூா் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது, அவா் மீது அரசுப் பேருந்து மோதியது. விபத்து குறித்து தகவல் அறிந்த கூம்பூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்க முயன்றனா். ஆனால், அந்த பகுதியைச் சோந்த பொதுமக்கள் உணவகத்துக்காக நான்கு வழிச் சாலையின் நடுவே தடுப்புச் சுவா் இல்லாததால், அடிக்கடி விபத்து நிகழ்க்கிறது. இந்த வழியை அடைக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அதிா்ச்சி அடைந்த போலீஸாா், பேருந்து ஓட்டுநரான அந்தியூரைச் சோந்த ரவியை (58) அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா். சுமாா் ஒரு மணி நேரப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பொதுமக்களை சமாதானப்படுத்தி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

Tags

Next Story