ராமநாதபுரம் மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம் மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் போராட்டம்

 மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் சமுதாய ஒற்றுமையை கெடுக்கும் மதுக்கடையை அகற்றுங்கள் : நரிப்பையூர் கிராம மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் கிராமத்தில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு போக்குவரத்து அதிகமுள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகிலேயே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. கிராமப்புறம் என்பதால் தனிமையை விரும்பும் குடிமகன்கள் நரிப்பையூரில் மையம் கொண்டுள்ளனர். மேலும் அரசு அனுமதித்த நேரத்தையும் கடந்து மது விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும், இதனை தட்டிக்கேட்டால் மது விற்பனையில் ஈடுபடும் குண்டர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் இந்த பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலரான கேப்டன் பூவனேந்திரன் கூறும்போது, நரிப்பையூரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறோம். பனைத்தொழிலாளர்கள், மீனவர்கள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக சகோதர உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். இங்கு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் முகம் தெரியாத வெளியூர் நபர்கள் நடமாட்டம் உள்ளது. போதை தலைக்கேரிய குடிமகன்கள் ஆடுகளை திருடுவது, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் பெண்கள் வெளியில் வரவே அச்சப்பட்டுள்ளார்கள். ஆகவே பெரிய அளவில் பொதுமக்கள் பாதிப்படையும் முன் நரிப்பையூரில் உள்ள மதுக்கடையை மூடி பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்றார். அதிகாலையில் கட்டிட வேலைக்கு செல்வோர் மற்றும் நல்லிரவு கடலுக்கு செல்லும் மீனவர்களை குறிவைத்து இருபத்து நான்கு மணி நேரமும் மது விற்பனை நடப்பதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நரிப்பையூர் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story