தோவாளையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தோவாளையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், 25 ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதனிடைய தோவாளை ஊராட்சியை ஆரல்வாய்மொழி பேரூராட்சியுடன் இணைக்கின்ற நடவடிக்கையை கைவிடக் கேட்டு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார். துணைத் தலைவர் தாணு, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், சமுதாய தலைவர்கள் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அதிமுக மாநில மீனவர் அணி அமைப்பாளர் பசிலியான், விடுதலை சிறுத்தை கட்சி சார்ந்த பகலவன், மதிமுகவை சேர்ந்த நீலகண்டன், தோவாளை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சேர்ந்த கனகப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story