மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ராமநாதபுரம் தும்படைக்காகோட்டையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.10.இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் ஆர் எஸ் மங்கலம் மக்கள்தொடர்பு முகாம் ஆர்.எஸ்மங்கலம் தாலுகா தும்படைக்காகோட்டை கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் தும்படைக்காகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன்,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.54,000/- மதிப்பீட்டிலும், முதியோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு ரூ.48,000/- மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு ரூ.48,000/- மதிப்பீட்டிலும், இலவச வீட்டு மனை பட்டா 2 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பீட்டிலும், முழுப்புலம் பட்டா 4 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இயந்திரம் 4 பயனாளிகளுக்கு ரூ.21,269/ரூ மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் தெளிப்பான் 2 பயனாளிகளுக்கு ரூ.4,150/- மதிப்பீட்டிலும்,உளுந்து சான்று விதைகள் 2 பயனாளிகளுக்கு ரூ.800/மதிப்பீட்டிலும்,தோட்டக்கலைத்துறையின் மூலம் விசைத்தெளிப்பான் கருவிகள் 1 பயனாளிகளுக்கு ரூ.21,736/- மதிப்பீட்டிலும், பழமரத்தொகுப்பு 4 பயனாளிகளுக்கு ரூ.600/- மதிப்பீட்டிலும்,சமூக நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 16 பயனாளிகளுக்கு ரூ.8,00,000/- இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.10,18,555/- இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மாரிமுத்து,ஆர்.எஸ்மங்கலம் தாசில்தார் சாமிநாதன், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி உம்முல் ஜாமியா,ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ராதிகா,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நாகமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story