தேனி : வருகின்ற 14ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தேனி : வருகின்ற 14ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தேனி மாவட்டம், சிவலிங்கநாயக்கன்பட்டியில் வரும் புதன்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், தேனி வட்டம், கொடுவிலார்பட்டி வருவாய் கிராமம், உட்கடை நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவலிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் வரும் 14.02.2024 ஆம் தேதி புதன் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

தேனி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள்) 14.02.2024-ஆம் தேதியன்று நேரில் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story