அடிபட்டு கிடந்த மயில் - வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
தாமலேரிமுத்தூர் இரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டுக் கிடந்த மயிலை மீட்ட பொதுமக்கள் அதற்கு சிகிச்சை அளித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் மயில் ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது அதனை அறிந்த அப்பகுதி மக்கள் அடிபட்டு கிடந்த மயிலை மீட்டு ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் சிகிச்சை அளித்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மயிலை வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story