அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை சிந்தாமணி பர்மா காலனி அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை சிந்தாமணி பர்மா காலனி அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல். *மாநகராட்சியால் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாத சாக்கடை மற்றும் குடிநீர் போன்றவை செய்து தர பர்மா காலனி பொதுமக்கள் சாலை மறியல். மதுரை கீரைத்துறை போலீஸார் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மதுரை சிந்தாமணி - நெடுங்குளம் சாலையில் சாலை மறியலால் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிப்பு.இதை தொடர்ந்து பொது மக்கள் பேட்டியில் கூறியது கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் பலமுறை புகார் அளித்துள்ளோம் மூன்று வருடங்களுக்கு முன்னால் பஸ் மறியல் பண்ணோம் அப்பொழுது இன்ஸ்பெக்டர் எத்த ராஜா அவர்கள் வந்தார்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரி எல்லோரும் வந்தார்கள்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்கள் பகுதியில் நூறு குடும்பத்துக்கு மேல் குடியிருந்து வருகிறோம் எங்கள் பகுதி வேலம்மாள் பின்னால் மற்றும் அனுப்பானடியில் இருந்து வரும் கழிவு நீர் எங்கள் குடியிருப்பில் சுற்றி தேங்கி நிற்கின்றது. இதனால் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் எல்லோருக்கும் நிறைய நோய் தொற்று ஏற்படுகிறது மேலும் அருகில் உள்ள ரைஸ் மில் இருந்து சாம்பல் தூசிகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளில் வருகிறத இதே கடல் நான்காண்டுகளாக புகார் அளித்துள்ளோம் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் வந்து ரைஸ் மில் ஓனர்களிடம் பேசி பேமென்ட் வாங்கிக் கொண்டு எங்களிடம் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி சென்று விடுகிறார்கள் எனவே கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த புகார்களும் நடவடிக்கைகளும் எடுக்கவில்லை இந்த இந்த ஆண்டாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம் மாநகராட்சி ஏசி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம் பேட்டி 1.தாமரைசெல்வி 2.முருகன்.

Tags

Next Story