சங்கரன்கோவிலில் நேற்று இரவு பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மலையான் குளத்தில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பணி முடிந்து வந்த மினிவேன் மோதி தலைகுப்பற கவிழ்ந்த விபத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் கூலி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இந்த தடுப்பு சுவரால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும் நிலையில் தடுப்புச் சுவரை அகற்றக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தும் அகற்றப்படாத நிலையில் தற்போது நடந்த விபத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் கோவில்பட்டி ராஜபாளையம் செல்லும் சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர்.
உடனடியாக இந்த சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது..