தனியார் ஆக்கிரமிப்பில் பொது பாதை - பாமக மனு

சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான பொதுபாதையை தனிநபர் ஆக்கிரமிப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தால் அதிகாரிகளே ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாகவும் கூறி பாமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பி . கே. என் பைபாஸ் சாலையில் அய்யாதுரை என்பவருக்கு சொந்தமான பரம்பரை சொத்தை கடந்த 1995ஆம் ஆண்டு விற்பனைக்காக வீட்டு மனைகளாக மாற்றி அமைக்கப்பட்டது அப்பொழுது அந்த பகுதியில் பாதைக்காக குறிப்பிட்ட இடத்தை அப்போதைய சிவகாசி நகராட்சி ஆணையரின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது .

தற்போது அந்த பொதுப் பாதையை வட மாநிலத்தைச் சார்ந்த நபர் தனது பேருக்கு மாற்றிக்கொண்டு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அந்த இடத்திற்கு பட்டாவும் வழங்கி விட்டதாகவும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இதுபோன்று சிவகாசியின் பல பகுதிகளில் உள்ள பொது இடங்களை தனி நபர்கள் பட்டா பெற்று வருவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story