பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்:ஆட்சியர் வளர்மதி அறிவுரை!

பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்:ஆட்சியர்  வளர்மதி அறிவுரை!

ஆட்சியர் வளர்மதி

வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் கோடைகாலத்தில் பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் ராணிப்பேட்டை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ராணிபேட்டை என ஆட்சியர் வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"வரும் காலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.டீ, காபி, குளிர்பானங்களை தவிர்த்து எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்த வேண்டும். பருவ கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குடியிருக்கும் வீட்டை திரை சீலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குளிர்ச்சியாக பராமரிக்க வேண்டும். இரவில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும்.தனியாக வசிக்கும் முதியவர்கள் உடல் நிலையை தினமும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டி, போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டும். செல்லப் பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் வீடுகளில் தண்ணீரை முடிந்தவரை அதிக அளவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். கியாஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story