குமரி மாவட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் மவுன ஊர்வலம்

குமரி மாவட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் மவுன ஊர்வலம்
கொட்டில்பாட்டில் மவுன ஊர்வலம்.
19ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் மீனவர்கள் மனவு அஞ்சலி ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்
குமரி மாவட்டத்தில் சுனாமி பேரலை தாக்கியதன் நினைவாக கடற்கரை கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்டு தோறும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 19-ம்ஆண்டு நினைவு தினம் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கொட்டில் பாடு சுனாமி காலணியில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. நினைவு ஸ்தூபியிலும் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அலெக்ஸ் ஆலயத்தில் 199 பேர் நினைவாக நினைவு திருப்பலி நடந்தது.

Tags

Next Story