தலைவாசல் அருகே பொதுமக்கள் ரயில் வழித்தடத்தில் அமர்ந்து போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தின் வழியாகசேலம் விருதாச்சலம் அகல ரயில் பாதை செல்கிறது.அதே பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது.இந்தப் பாதையின் வடக்கு பகுதியில் தேவயாக்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தின் வழி பாதையில் ரயில்வே மேம்பாலமும் மற்றொரு பாதையில் ரயில்வே கேட் உள்ளது.இந்த வழிப்பாதையை ரயில்வே நிர்வாகம் கடந்த இரு மாதங்களுக்கு முன் மூடியதால் பொதுமக்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இந்நிலையில் மாற்று வழி பாதை ஏற்படுத்தி தர வலியுறுத்தி சேலம் விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் இருந்து வந்த தலைவாசல் வட்டாட்சியர் அன்பு செழியன் மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தால் விருதாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரயில் 25 நிமிடம் தாமதமாக சென்றது.