திறந்தவெளி பாராக மாறும் பொது இடங்கள்
திறந்தவெளி பாராக மாறும் பொதுஇடங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களை மது குடிப்பவர்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.பகல் நேரங்களிலே பெண்கள், குழந்தைகள் பெரியோர் நடமாடும் இடங்களில் கூச்சமின்றி மது குடிக்கும் போக்கு தொடர்கிறது . போதையில் அப்பகுதியிலே அரைகுறை ஆடைகளுடன் படுத்து கிடக்கின்றனர். இதனால் பொது இடங்களில் பெண்கள் நடமாட முடிவதில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு அடைவதுடன் பாதுகாப்பு குறைபாடும் உருவாகிறது. வயல்வெளிகளில் பாட்டில்களை உடைத்து போடுவதால் விவசாய நிலங்களில் பணிபுரிவோர் காயம் அடைகின்றனர். இது போன்று மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story