அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பொதுப்பேச்சுத்திறன் பயிற்சி

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பொதுப்பேச்சுத்திறன் பயிற்சி

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளின் பயனுள்ள பொதுப்பேச்சுத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது.


கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளின் பயனுள்ள பொதுப்பேச்சுத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை இதயம் நல்லெண்ணெய், விருதுநகர் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து மாணவிகளின் பயனுள்ள பொதுப்பேச்சுத்திறன் மேம்பாட்டுத் திறனை வளர்ப்பதிற்கான ப்ராஜக்ட் ஃபோக்கஸ் 82: பயனுள்ள பொதுப்பேச்சுத்திறன் மேம்பாடு (Project Focus 82: Effective Public Speaking) என்ற பயிற்சிப் பட்டறையை மார்ச் மாதம் 05-ம் தேதி நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மேடையில் மற்றவர்கள் முன்னிலையில் கூச்சமின்றி திறம்பட பேசும் பயிற்சி செய்முறை வாயிலாக அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் பயிற்சி முடிந்தவுடன் ஒவ்வொருவராக மற்றவர்கள் முன் பேசுவதற்கான ஊக்கம் அளிக்கப்ட்டார்கள்.

அனைத்து மாணவிகளும் மிகச்சிறப்பாக தங்கள் பொதுப்பேச்சுத்திறனை வெளிப்படுத்தியது இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பல்கலைக்கழகத்தின் மாண்புமிகு துணைவேந்தர் திருமதி முனைவர் கலா சேதுபதி அவர்கள் தலைமையேற்று பெண்கள் பயனுள்ள பொதுப்பேச்சுத்திறன் வள்ர்த்துக் கொள்வதின் அவசியத்தையும் இத்துறையில் மிகச்சிறந்து விளங்கும் பெண் பேச்சாளர்களை இத்திறன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளையும் மேன்மைகளையும் மேற்கோள் காட்டி எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பதிவாளர் முனைவர் ஷீலா மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் கிளாரா தேன்மொழி ஆகியோர் துவக்கவுரை மற்றும் பாராட்டு உரை வழங்கி மாணவிகளையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரையும் ஊக்குவித்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் திரு. மதன் குமார் கோவிந்தன் கலந்து கொண்டு மாணவிகளுக்குத் தேவையான குறிப்பேடு மற்றும் எழுதுகோல் ஆகியவற்றை இலவசமாக அளித்து மாணவிகளின் ஆர்வத்தைப் பாராட்டிப் பேசினார். அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தங்கள் பேச்சாற்றலின் மூலமும் திறமைகளின் மூலமும் இப்பல்கலைக்கழகத்தின் பெருமையை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று கூறினார்.

இப்பயிற்சியினை விருதுநகர் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் மற்றும் பயிற்சியாளர் திரு ரெங்கசாமி அவர்கள் மாணவிகளுக்கு அளித்தார். முன்னதாக ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் ஜெயப்ரியா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயா இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாய் இருந்த அனைவர்க்கும் மற்றும் இதயம் நல்லெண்ணெய் திரு முத்து அவர்களுக்கும் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், அனைத்துத் துறைத்தலைவர்கள், புலமுதல்வர்கள், மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கச் செயலர் திரு. அக்பர் ஷாய்ட், முன்னாள் தலைவர் திரு. சுகுமார், கொடைக்கானல் ரோட்டரி சங்கம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story