மனுக்களை புகார் பெட்டியில் அளித்து வரும் பொதுமக்கள்
சிவகங்கையில் குறைதீர் கூட்டம் நடைபெறாத நிலையில் மனுக்களை புகார் பெட்டியில் பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.
சிவகங்கையில் குறைதீர் கூட்டம் நடைபெறாத நிலையில் மனுக்களை புகார் பெட்டியில் பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் புகார் மனுக்கள் நாள்தோறும் பொதுமக்கள் கொண்டு வந்து தீர்வு காணும் நிகழ்வு அதிகரித்ததை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் ஆகியோர் தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமை மனு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது இருந்தாலும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எஸ்பி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது புகார்களை புகார் பெட்டியில் அளித்து செல்கின்றனர்
Next Story