குடியிருப்பு பகுதியில் குப்பைகள் எரிப்பதால் பொதுமக்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் குப்பைகள் எரிப்பதால் பொதுமக்கள் அவதி

குப்பைகள் எரிக்கப்டுவதால் ஏற்பட்டுள்ள புகைமண்டலம் 

திருத்தணி நகராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்கா குப்பைகள் என பிரித்து பெரியார்நகர் பகுதிக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கு மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக பிரித்து தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக பிரிக்காமல் குப்பை குவியலாக குவிக்கப்பட்டு, பின் தீயிட்டு கொளுத்தி எரியூட்டப்படுகிறதாக பெரியார் நகர் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதவிர குப்பைகள் எரிப்பதால் அதில் எழும் புகையானது பெரியார்நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகளுக்கு செல்வதால் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குப்பைகளை எரிக்கக் கூடாது என பெரியார் நகர் பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். ஆனால் நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் நகராட்சி ஊழியர்கள் உரக்கிடக்கு அருகே குப்பைகள் குவித்து தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் புகைமண்டலாக மாறியது. மேலும் அந்த புகை குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டனர். எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் திருத்தணி நகருக்கு நேரில் வந்து செய்து முறையாக குப்பைகளை தரம் பிரித்து கையாள உத்தரவிட வேண்டும் என திருத்தணி நகர வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


Tags

Next Story