குப்பைகளை எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி !
குப்பைகள்
விழுப்புரம் நகரில் உழவர் சந்தை பகுதிக்கு பின் பகுதியில், சாமுண்டீஸ்வரி நகரில் உள்ள காலியிடங்களில் தொடர்ந்து நீண்ட காலமாக குப்பைகள் கொட்டி, அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அங்கு, நீண்ட காலம் பயன்படாமல் உள்ள சினிமா தியேட்டர் பகுதி எதிரே உள்ள காலி இடத்தில், தினசரி குப்பைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், நகராட்சி சார்பிலேயும் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டி ஊழியர்களே எரிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
நெரிசலான வீடுகள் உள்ள குடியிருப்பு மிகுந்த அந்த இடத்தில், தினசரி குப்பைகள் கொட்டுவதும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி அதற்கு தீ வைத்து எரிப்பதால், புகை மூட்டம் ஏற்பட்டு சுகாதார சீர்கெடு தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், எரிப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.