அலறும் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் அவதி!

அலறும் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் அவதி!

ஏர் ஹாரன்

அலறும் ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் அவதி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஆலங்குடியும் ஒன்று. இங்கு பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் பணிமனை, கல்வி நிறுவனங்கள், வங்கிகள், பிரசித்தி பெற்ற தர்மசம் வர்தினி கோயில் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் நகரில் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இருக்கிறது. இந்நிலையில் சில தனியார் பஸ்கள் டிப்பர் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றன. இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வாகனங்களில் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story