பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி!

பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி!

பன்றிகள் 

ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் அருகில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் பின்புறம் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு தீயணைப்பு நிலையம், கால்நடை மருத்துவமனையும் உள்ளன. இந்த பகுதியில் 100- க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் ,நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story