டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிட்ட பொதுமக்கள்

டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிட்ட பொதுமக்கள்

டெலஸ்கோப்பில் நிலா பார்வையிடும் நிகழ்ச்சி 

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், அஸ்ட்ரோ கிளப் சார்பில் ராமசாமி தாஸ் பூங்காவில் டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் நிலாவை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து செல்வம், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், ஆகியோர் டெலஸ்கோப்பில் நிலாவை பார்வையிட பயிற்சி அளித்தனர்.இதில் ஆசிரியர்கள் பிரேம், சுந்தரம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story