விழுப்புரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

மக்கள் நல பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பணியாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

மக்கள் நலப்பணியாளர்களின் 33 வருட துன்பங்களுக்கும், துயரங் களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து 13,500 குடும்பங்களை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்-அமைச்சர், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும், பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 9.11.2011 முதல் இறந்துபோன மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட் சம் நிவாரணத் தொகையும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்க வேண்டும், பணியிட மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் சம்பளம் வழங்கக்கோரியும் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந் திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தவேல் தலைமை தாங்கி சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் ஜெயகாந்தன், ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம், வேலாயுதம், ஜெயபாலன், பாலகிருஷ்ணன், பூபாலன், எழில் நாகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story